காஞ்சீபுரம் பட்டு கூட்டுறவு சங்க அலுவலகத்தில் மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை


காஞ்சீபுரம் பட்டு கூட்டுறவு சங்க அலுவலகத்தில் மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 20 Jun 2021 10:25 AM IST (Updated: 20 Jun 2021 10:25 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் காந்திரோட்டில் டாக்டர் கலைஞர் கருணாநிதி பட்டு கூட்டுறவு சங்கம் உள்ளது. இங்கு மேலாளராக சின்ன காஞ்சீபுரம் சித்தி விநாயகர் பூந்தோட்டம் தெரு பகுதியை சேர்ந்த முனியப்பன் (வயது 58) பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் பட்டு கூட்டுறவு சங்கத்துக்கு நேற்று காலை பணிக்கு வந்த முனியப்பன் அலுவலக உதவியாளரை கீழே இருக்க சொல்லிவிட்டு 2-வது மாடியிலுள்ள ஆவணங்களை சரிபார்க்க செல்வதாக கூறிவிட்டு சென்றார். அலுவலக துப்புரவு பணியாளர், பணி செய்யசென்றபோது சங்க அலுவலக 2-வது தளத்தில் முனியப்பன் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து சின்ன காஞ்சீபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முனியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருந்து கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில் தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் குடும்பத்தகராறு காரணமாக மன உளைச்சல் இருந்த நிலையில் முனியப்பன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Next Story