கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது
திருமங்கலம் அருகே கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருமங்கலம்,
இந்த நிலையில் கூடகோவில் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கோவையைச் சேர்ந்த ராமன் மகன் சூர்யா (21), காரியாபட்டி அருகே மீனாட்சிபுரம் இருளப்பன் மகன் கார்த்தி (21) என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் கோவையில் கொத்தனார் வேலை பார்ப்பது தெரியவந்தது. பல்லடம் பகுதியில் ேமாட்டார் சைக்கிளை திருடி, இந்தப் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தது விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் கைது செய்து கூடகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story