மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறித்த ஆசாமிகள்


மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறித்த ஆசாமிகள்
x
தினத்தந்தி 21 Jun 2021 1:40 AM IST (Updated: 21 Jun 2021 1:40 AM IST)
t-max-icont-min-icon

வாடிபட்டி அருகே மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறித்த 2 ஆசாமிகளை போலீசார் தேடுகிறார்கள்.

வாடிப்பட்டி,

வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடசாமி. இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 76). இவர் நேற்று அதிகாலை 6 மணிக்கு வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டு இருந்தார். அப்போது 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அதில் ஒருவர் இறங்கி வந்து ராஜலட்சுமியின் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். நகையை பறிக்கொடுத்த ராஜலட்சுமி, திருடன், திருடன் என சத்தம் போட்டார். அக்கம், பக்கத்தினர் அங்கு வருவதற்குள் மோட்டார் சைக்கிள் ஆசாமிகள் தப்பி சென்று விட்டனர். திருடு போன நகையின் மதிப்பு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ல்வியா ஜாஸ்மின், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story