குவாரி தண்ணீரில் மூழ்கி மாணவி பலி


குவாரி தண்ணீரில் மூழ்கி மாணவி பலி
x
தினத்தந்தி 21 Jun 2021 2:10 AM IST (Updated: 21 Jun 2021 2:10 AM IST)
t-max-icont-min-icon

மேலூர் அருகே குவாரி தண்ணீரில் மூழ்கி மாணவி பலியானார்.

மேலூர்,

மேலூர் அருகே கீழவளவு போலீஸ் சரகத்தில் உள்ள பூதமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் ரக்சனா (வயது 14). 7-ம் வகுப்பு மாணவி. இந்த நிலையில் சம்பவத்தன்று வாச்சாபட்டியில் உள்ள  உறவினர் முருகேசனின் வீட்டுக்கு ரக்சனா வந்தார். அருகில் உள்ள செயல்படாத கிரானைட் குவாரியில் துணிகளை துவைக்க சித்தி முருகேஸ்வரியுடன் மாணவி ரக்சனாவும் சென்றுள்ளார். அப்போது அங்கு தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி ரக்சனா இறந்தார்.
இதுகுறித்து கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Related Tags :
Next Story