தாளவாடி அருகே கரும்பு, வாழை தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்


தாளவாடி அருகே கரும்பு, வாழை தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 21 Jun 2021 2:21 AM IST (Updated: 21 Jun 2021 2:21 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே கரும்பு, வாழை தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்தன.

தாளவாடி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஜீர்கள்ளி வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது. இந்தநிலையில் தாளவாடியை அடுத்த கெட்டவாடியை சேர்ந்த இளங்கோ (வயது 42) என்பவரது தோட்டத்தில் நேற்று இரவு யானைகள் புகுந்தன. அந்த தோட்டத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் கரும்பு, வாழை ஆகிய பயிர்களை அவர் சாகுபடி செய்து உள்ளார். 
அங்கு 3 காட்டு யானைகள் புகுந்து கரும்பு, வாழை பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. யானைகளின் சத்தம் கேட்டு அங்கு திரண்ட விவசாயிகள் பட்டாசு வெடித்து யானைகளை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்கள். சுமார் 2 மணிநேர போராட்டத்துக்கு பிறகு யானைகள் காட்டுக்குள் விரட்டியடிக்கப்பட்டன. இதில் ½ ஏக்கர் பரப்பளவில் உள்ள கரும்புகள், 50 வாழை மரங்கள் நாசமானது.

Next Story