கிராமப்புறங்களில் கொரோனா நோய் தடுப்பு பணிகள்
மதுரை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் நடைபெறும் நோய்த்தடுப்பு பணிகளை துணை இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார்.
மதுரை,
மதுரை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் நடைபெறும் நோய்த்தடுப்பு பணிகளை துணை இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார்.
கொரோனா பாதிப்பு
மதுரை மாவட்டத்தை பொறுத்தவரையில் கொரோனா பாதிப்பு தற்போது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நகர் பகுதியில் அதிக அளவில் நோய் தொற்று கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து நோய்த்தொற்று அதிகமுள்ள தெருக்களை மாநகராட்சி சார்பில் மூடும் பணிகள் நடைபெற்றது.
புறநகர் பகுதிகள்
இந்தப்பணிகளை முடுக்கிவிடுவது தொடர்பாக, மதுரை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அர்ஜூன்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தி வருகிறார்.
துணை இயக்குனர் ஆய்வு
இதுபோல் மேலூர் திருவாதவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட, கட்டயம்பட்டி கிராமத்தில், கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பணிகளையும் துணை இயக்குனர் பார்வையிட்டார்.
மேலும் அங்குள்ள மக்களுக்கு முககவசம் மற்றும் சமூக விலகல் போன்றவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து, மூன்றாம் அலையில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என அறிவுத்தினார்.
Related Tags :
Next Story