தாளவாடியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
தாளவாடியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தாா்.
தாளவாடி
தாளவாடி, ஆசனூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது போலீஸ் நிலையங்களில் உள்ள கோப்புகளை பார்வையிட்டார். மேலும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து தமிழக-கர்நாடக எல்லை பகுதியான பாரதிபுரம், ராமாபுரம், காரப்பள்ளம், கேர்மாளம் ஆகிய சோதனை சாவடிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பார்வையிட்டார். அப்போது அனைத்து வாகனங்களையும் முறையாக சோதனை நடத்தியபிறகு மாவட்டத்துக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று போலீசாருக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story