கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு கீழ் வந்தது
மதுரையில் நேற்று புதிதாக 151 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதன் மூலம் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் வந்துள்ளது. கொரோனா பாதித்த 5 பேர் உயிரிழந்தனர்.
மதுரை,
மதுரையில் நேற்று புதிதாக 151 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதன் மூலம் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் வந்துள்ளது. கொரோனா பாதித்த 5 பேர் உயிரிழந்தனர்.
கொரோனா பாதிப்பு
. மதுரையில் இதுவரை 71 ஆயிரத்து 299 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுபோல், நேற்று 562 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம், இதுவரை 69 ஆயிரத்து 408 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள்.
ஆயிரத்துக்கு கீழ் சென்றது
மதுரையில் கடந்த 9-ந் தேதி நிலவரப்படி 10 ஆயிரம் பேர் சிகிச்சையில் இருந்தனர். அதன் பின்பு தினமும் குணமடைந்த செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் விளைவாக தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 182 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். மதுரையில் நகர் மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 3 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள்.
அவர்கள் 40, 68, 73 வயது பெண்கள், 76,93 வயது ஆண்கள் ஆகும். மதுரையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1068 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story