டி.என்.பாளையம் அருகே மின்சாரம் தாக்கி மயில் சாவு


டி.என்.பாளையம் அருகே மின்சாரம் தாக்கி மயில் சாவு
x
தினத்தந்தி 21 Jun 2021 2:33 AM IST (Updated: 21 Jun 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

டி.என்.பாளையம் அருகே மின்சாரம் தாக்கி மயில் இறந்தது.

டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் அருகே உள்ள வாணிப்புத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு டிரான்ஸ்பார்மர் உள்ளது. அந்த பகுதியில் ஆண் மயில் ஒன்று பறந்து சென்றபோது டிரான்ஸ்பார்மருக்கு செல்லும் மின்கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி அந்த மயில் இறந்தது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் டி.என்.பாளையம் வனத்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர். அவர்கள் மயிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காராச்சிகொரை வன கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கால்நடை டாக்டர் அசோகன், பிரேத பரிசோதனை செய்த பிறகு மயிலின் உடல் புதைக்கப்பட்டது.

Next Story