நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் விவரம்


நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் விவரம்
x
தினத்தந்தி 21 Jun 2021 2:41 AM IST (Updated: 21 Jun 2021 2:41 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணிகளால் நாளை(செவ்வாய்க்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

மதுரை,

பராமரிப்பு பணிகளால் நாளை(செவ்வாய்க்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

பராமரிப்பு பணிகள்

தமுக்கம் மின்பிரிவு பகுதியில் நாளை(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அண்ணா பஸ் நிலையம், காந்தி மியூசியம், கரும்பாைல பகுதிகள், டாக்டர் தங்ராஜ் சாலை, மடீசியா, அண்ணா மாளிகை, எஸ்.பி.ஐ. குடியிருப்பு பகுதிகள், காந்திநகர், ராஜம்பிளாசா, கமலா நகர், குருவிகாரன் சாலை, மதிச்சயம், யுனியன் கிளப், தல்லாகுளம், முதலியார் கிழக்கு தெரு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி மதியம் முதல் 1 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
 சமயநல்லூர் கோட்டம் மாணிக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் உள்ள வளையப்பட்டி பீடர் மற்றும் சோழவந்தான் துணை மின் நிலையத்தில் உள்ள திருவேடகம் பீடர்களில் பராமரிப்பு பணி  நாளை நடக்கிறது. எனவே ராஜகள்பட்டி, மறவர்பட்டி சத்ரவெள்ளாளப்பட்டி, வளையப்பட்டி, ராமகவுடன்பட்டி, கோழிஞ்பட்டி, தெத்தூர், டி. மெட்டுப்பட்டி, திருவேடகம், கிழமாட்டாயன் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் 1 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

திருவள்ளுவர் நகர்

 பசுமலை துணை மின்நிலையத்தில் பழங்காநத்தம் உயர்அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே முத்துராமலிங்கம்புரம் 1,2,3-வது ெதரு முழுவதும், பைக்கரா மேட்டுத்தெரு, டி.பி.கே. மெயின் ரோடு, சரவண ஸ்டோர்ஸ் முதல் இ.எஸ்.ஐ. வரை, திருவள்ளுவர் நகர் முழுவதும், யோகியார் நகர், நித்திலா மருத்துவமனை, அழகப்பன் நகர், பாலாஜி தெரு, ரோஜா தெரு, சத்யசாய்நகர், குறிஞ்சி தெரு, கோவலன் நகர், சாய்பாபா கோவில் பின்புறம் முழுவதும் நாளை காலை 10 மணி முதல் 1 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
வில்லாபுரம் துணை மின்நிலையத்தில் ஜெய்ஹிந்த்புரம், எம்.கே.புரம் உயர் அழுத்த மின்பாதையில் நாளை மாதாந்திர பணிகள் நடக்கிறது. எனவே நேரு நகர், கிருஷ்ணா ரோடு, ராஜம் ரோடு, அழகப்பன் நகர், சந்தானம் ரோடு, துரைச்சாமி ரோடு, மீனாட்சி ரோடு, டி.வி.எஸ்.நகர், ஜீவாநகர் 1, 2 தெரு, அம்பேத்கர் நகர், பிரேமா பள்ளி தெரு, ரமணஸ்ரீ கார்டன், திலகர் தெரு, பெரியார் தெரு, முனியாண்டி கோவில் தெரு, காமராஜர் காலனி, ராமையா மெயின் ரோடு, ராமையா தெரு, வ.உ.சி.தெரு, சித்திவிநாயகர் தெரு, விசாலபாகம் 1,2,3, தெரு, முத்துத்தேவர் தெரு, அண்ணா முக்கிய வீதி, நேதாஜி தெரு முழுவதும் நாளை காலை 10 மணி முதல் 1 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

கீழவாசல்

மாகாளிப்பட்டி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட கீழவாசல், நெல்பேட்டை முதல் யானைக்கல்வரை, கீழவெளி வீதி மிஷன் மருத்துவமனை, பாம்பன்ரோடு, வீமபிள்ளை வடக்குச்சந்து, வாழைத்தோப்பு, என்.எம்.ஆர்.ரோடு, சிந்தாமணி ரோடு, சி.எஸ்.ஐ. பல் மருத்துவக்கல்லூரி பகுதிகள் மற்றும் நாகுபிள்ளை தோப்பு.
அனுப்பானடி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தாய்நகர், மாருதிநகர், கங்காநகர், சோணையாநகர், சவுந்தரவிலாஸ் ரைஸ்மில் முதல் சன்ரைஸ் அப்பளம் சந்து முழுவதும் நாளை காலை 10 மணி முதல் 1 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவல் மின்வாரியம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story