50 சதவீத பயணிகளுடன் பஸ் இயங்க அனுமதி: காஞ்சீபுரம் பஸ்நிலைய சீரமைப்பு பணிகள் மும்முரம்
50 சதவீத பயணிகளுடன் பஸ் இயங்க அனுமதி: காஞ்சீபுரம் பஸ்நிலைய சீரமைப்பு பணிகள் மும்முரம்.
காஞ்சீபுரம்,
கொரோனா நோய்தொற்று குறைந்துள்ள காஞ்சீபுரம் மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவில் தளர்வுகளை அறிவித்து 50 சதவீத பயணிகளுடன் பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள காஞ்சீபுரம், ஓரிக்கை, உத்திரமேரூர், உள்ளிட்ட பஸ் டெப்போக்களில் உள்ள பஸ்களை இயக்குவதற்கு தயார் செய்யும் பணிகளை போக்குவரத்து தொழிலாளர்கள் மேற்கொண்டனர்.
மேலும் பஸ்களை இயக்குவதற்கு வசதியாக காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்றது.

Related Tags :
Next Story