வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக புத்தாக்க திட்ட முதன்மை செயல் அலுவலர் ஆய்வு
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊத்துக்காடு கிராமத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட முதன்மை செயல் அலுவலர் மரியம் பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது கிராம மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் வளர்க்கப்பட்டு வரும் கீரை வளர்ப்பு தோட்டத்தை நேரில் பார்வையிட்டு பயிரிடப்படும் கீரை வகைகள் குறித்தும், மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் குறைகளை கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் 2 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவியாக தலா ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையையும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தில் 4 பயனாளிகளுக்கு கடனுதவியாக தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையையும் வழங்கினார். ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் டாக்டர்.எம்.ஆர்த்தி தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட கூடுதல் இயக்குனர் அருள்ஜோதி அரசன், மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயசுதா, மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாசராவ், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கராஜ், முத்துசுந்தரம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story