உத்திரமேரூர் அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது


உத்திரமேரூர் அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 21 Jun 2021 3:42 PM IST (Updated: 21 Jun 2021 3:43 PM IST)
t-max-icont-min-icon

உத்திரமேரூர் சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக உத்திரமேரூர் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது.

இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குன்னவாக்கம் கூட்டு சாலை அருகே உள்ள காட்டின் முட்புதர் அருகே கஞ்சா வைத்து விற்று கொண்டிருந்த ஆலஞ்சேரி கிராமத்தை 
சேர்ந்த பிரதீப் குமார் (வயது 20), படூர் பஞ்சாயத்தில் உள்ள தட்டான்குளம் கிராமத்தை சேர்ந்த டெல்லி பாபு (28), மருதம் காலனியை சேர்ந்த ஆதி கிருஷ்ணன் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Next Story