பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி
திண்டுக்கல்லில் மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
திண்டுக்கல்:
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் திண்டுக்கல் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
மேலும் மாநகராட்சி பொது சுகாதாரத்துறை மூலம் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள இ.பி.காலனி 3-வது தெருவில் வசிக்கும் 250 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.
இதில் 18, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ‘கோவிஷீல்டு’ முதல் மற்றும் 2-வது டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. முகாமுக்கான ஏற்பாடுகளை மாநகர்நல அலுவலர் லட்சியவர்ணா மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story