பவானிசாகர் அணை முன்பு பவானி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்


பவானிசாகர் அணை முன்பு பவானி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 22 Jun 2021 3:41 AM IST (Updated: 22 Jun 2021 3:41 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அணை முன்பு பவானி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பவானிசாகர்
பவானிசாகர் அணை முன்பு பவானி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பாலம் பழுதடைந்தது
பவானிசாகர் அணைக்கு முன்பு பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த பழைய ஆற்றுப்பாலம் பழுதடைந்தது. அந்த பாலத்தின் நடுப்பகுதியில் துளைகள் விழுந்ததால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாலத்தில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. 
இதன் காரணமாக புங்கார், பெரியார்நகர், காராச்சிக்கொரை, புதுபீர்கடவு, பட்டரமங்கலம், கொத்தமங்கலம், தெங்குமரஹடா, அல்லி மாயாறு, கல்லாம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. எனவே அந்த கிராம பகுதியை சேர்ந்த மக்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி தொட்டம்பாளையம் ஆற்று பாலத்தின் வழியாக சென்று வருகிறார்கள். 
ரூ.8 கோடி
பழுதடைந்த பழைய பாலத்துக்கு பதிலாக புதிய பாலம் கட்டுவதற்கு ரூ.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதன்பிறகு புதிய பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது பாலம் கட்டுமான பணி 80 சதவீதம் நிறைவு பெற்ற நிலையில் கட்டுமான பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். 
3 மாதங்களில் பாலம் கட்டுமான பணிகள் நிறைவடைந்து போக்குவரத்து தொடங்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பாலம் திறக்கப்படும் என்று கிராம மக்களும்  எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Next Story