புஞ்சைபுளியம்பட்டி அருகே சாராயம் காய்ச்சிய தந்தை- மகன்கள் உள்பட 5 பேர் கைது; மேலும் ஒருவருக்கு வலைவீச்சு
புஞ்சைபுளியம்பட்டி அருகே சாராயம் காய்ச்சிய தந்தை- மகன்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி அருகே சாராயம் காய்ச்சிய தந்தை- மகன்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தந்தை-மகன்கள்
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள குரும்பபாளையம் கிராமத்தில் சாராயம் காய்ச்சப்படுவதாக புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்புரத்தினம் தலைமையிலான போலீசார் குரும்பபாளையம் பகுதியில் திடீர் சோதனையிட்டனர். அப்போது 3 பேர் ஓடை பகுதியில் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சி கொண்டு இருந்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர்கள் குரும்பபாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 47), அவரது மகன்கள் சிவக்குமார் (28), அஜீத்குமார் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 பேரலில் 325 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 2 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சாராய ஊறலை கீழே கொட்டி போலீசார் அழித்தனர்.
375 லிட்டர் சாராய ஊறல்
இதேபோல் குரும்பபாளையம் கொள்ளான்தோட்டம் பகுதியை சேர்ந்த கருப்புசாமி (46), சதீஷ் (23), மணி ஆகியோர் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கருப்புசாமி, சதீஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 375 லிட்டர் சாராய ஊறல், 2 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தப்பி ஓடிய மணியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story