ஈரோட்டில் பிளஸ்-1 மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


ஈரோட்டில் பிளஸ்-1 மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 22 Jun 2021 3:41 AM IST (Updated: 22 Jun 2021 3:41 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில், பிளஸ்-1 மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு
ஈரோட்டில், பிளஸ்-1 மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பிளஸ்-1 மாணவி
ஈரோடு சாஸ்திரி நகர் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 24). வீடுகளுக்கு சென்று உணவு வினியோகம் செய்யும் பிரபல நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், ஈரோட்டை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் 15 வயது சிறுமியிடம் பழகி, ஆசை வார்த்தை கூறி கடந்த 14-ந்தேதி கடத்தி சென்றார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் மணிமாறனையும், சிறுமியையும் தேடி வந்தனர். இந்த நிலையில், ஈரோடு ரெயில் நிலையம் அருகே சிறுமியுடன் சுற்றித்திரிந்த மணிமாறனை, மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா தலைமையிலான போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
பாலியல் பலாத்காரம்
விசாரணையில், சிறுமியை மணிமாறன் ரெயில் மூலம் சேலம் மாவட்டத்திற்கு கடத்தி சென்று, அங்குள்ள ஒரு வீட்டில் வைத்து திருமணம் செய்து, சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து, மணிமாறனை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டு உத்தரவுப்படி, மணிமாறன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டார்.

Next Story