கோபியில் கொரோனா சிகிச்சை மையங்களில் கலெக்டர் ஆய்வு


கோபியில் கொரோனா சிகிச்சை மையங்களில் கலெக்டர் ஆய்வு
x

கோபியில் கொரோனா சிகிச்சை மையங்களில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.

கடத்தூர்
கோபியில் கொரோனா சிகிச்சை மையங்களில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.கோபியில் கொரோனா சிகிச்சை மையங்களில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.
கொரோனா சிகிச்சை மையம்
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகமாக காணப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் ஆஸ்பத்திரிகளிலும், பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கோபி கலை அறிவியல் கல்லூரியில் தற்காலிக கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு தொற்று குறைவாக உள்ள நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
கலெக்டர் ஆய்வு
இந்தநிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அங்கு ஆய்வு நடத்தினார். இதேபோல் கோபி நகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடம், கோபி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிகிச்சை மையம் ஆகிய பகுதிகளுக்கும் அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், ஆக்சிஜன் இருப்பு, படுக்கை வசதிகள், சுகாதார மேம்பாடு ஆகியன குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 
மேலும், கொரோனா பாதிப்பு காரமணாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளுக்கும் சென்ற கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் முறையாக வினியோகம் செய்யப்படுகிறதா என்று கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவி, தாசில்தார் தியாகராஜன், வருவாய் ஆய்வாளர் ரஜ்குமார் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story