காஞ்சீபுரம் பாலுச்செட்டி சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் 4 நாட்கள் மின்தடை


காஞ்சீபுரம் பாலுச்செட்டி சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் 4 நாட்கள் மின்தடை
x
தினத்தந்தி 22 Jun 2021 4:25 PM IST (Updated: 22 Jun 2021 4:25 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் தெற்கு கோட்டம், தாமல் மற்றும் முசரவாக்கம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் சுற்றியுள்ள கிராமங்களுக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் 25-ந் தேதி வரை காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் என செயற்பொறியாளர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதேபோல் காஞ்சீபுரம் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அந்த நேரத்தில் காஞ்சீபுரம் ஒட்டியுள்ள சில பகுதிகளான ஒலிமுகமதுபேட்டை, வெள்ளை கேட், 
காரைப்பேட்டை, கூரம் கீழம்பி, திம்மசமுத்திரம் மற்றும் வெளியூர் துணை மின் நிலையங்களை சில கிராமங்களிலும் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் 12 மணி வரை மின்தடை ஏற்படும். இந்த தகவலை காஞ்சீபுரம் 
செயற்பொறியாளர் வி.சரவணதங்கம் தெரிவித்துள்ளார்.

பவுஞ்சூர், கடப்பாக்கம்:- செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் கோட்டத்திற்குட்பட்ட மதுராந்தகம், கடுகப்பட்டு, செய்யூர் துணை மின்நிலையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே கோட்டத்திற்குட்பட்ட காவாத்தூர், மாரிபுத்தூர், கெண்டரச்சேரி, முதுகரை, தச்சூர், பவுஞ்சூர், திருவாதூர், லத்தூர், அகரம், விழுதமங்களம், பாக்கம், சிலாவட்டம், கெங்க தேவன்குப்பம், பனையூர் கப்பிவாக்கம், விளம்பூர், தேன்பாக்கம், கடப்பாக்கம், சேம்புலிபுரம் உள்பட கிராமங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணிவரை மின்சாரம் இருக்காது என மதுராந்தகம் மின் செயற்பொறியாளர் முனைவர் ச.கிருபானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

உத்திரமேரூர்:- தமிழ்நாடு மின் உற்பத்தி, மற்றும் பகிர்மான கழகம் காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டம் தெற்குக் கோட்டத்தில் உள்ள களியாம்பூண்டி, மாகரல், பெருநகர், மற்றும் நீரடி துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி 
நடைபெறுவதால் உத்திரமேரூர், நீரடி, வேடபாளையம், காரணி மண்டபம், களியாம்பூண்டி, மேல்பாக்கம், திருப்புலிவனம், மருதம், சிளாம்பாக்கம், ஆண்டி தாங்கல், மாகரல், உள்ளிட்ட பகுதிகளில் இன்று( செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என ஆர்.சி. பிரசாத் செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

கல்பாக்கம்:-செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் துணை மின்நிலையத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) சிறப்பு பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதனால் இல்லீடு, சூணாம்பேடு, வெண்ணாங்குப்பட்டு, வில்லிப்பாக்கம், கயநல்லூர், மணப்பாக்கம், புதுப்பட்டு, வெள்ளங்கொண்ட அகரம், வன்னியநல்லூர், கொளத்தூர், அகரம் உட்பட கிராமங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணிவரை மின்சார விநியோகம் இருக்காது என அச்சிறுபாக்கம் மின் செயற்பொறியாளர் கு.கிறிஸ்டோபர் லியோராஜ் பத்திரிகை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story