திருவள்ளூர் கடம்பத்தூர் வயலில் மின்மோட்டாரை திருடிய 4 பேர் கைது


திருவள்ளூர் கடம்பத்தூர் வயலில் மின்மோட்டாரை திருடிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 22 Jun 2021 11:11 AM GMT (Updated: 2021-06-22T16:41:53+05:30)

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் கண்டிகையை சேர்ந்தவர் விநாயகம் (வயது 40).விவசாயியான இவரது வயலில் இருந்த மின் மோட்டார்களை சிலர் திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்து அவர் கடம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் மணவாளநகர் சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வரும் போது அவரை வழிமறித்த சிலர் அடித்து உதைத்துள்ளனர். இதுகுறித்து விநாயகம் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விநாயகம் வயலில் இருந்த மின் மோட்டார்களை திருடியதாக திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூரை சேர்ந்த ஹரிஹரன் (19), வசந்த் (21) ஜெகன், (25), ஹரிதாஸ் (21) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story