சந்தாதாரர்களின் விருப்பமின்றி, அரசு செட்-டாப் பாக்ஸ்களை மாற்றினால் நடவடிக்கை
சந்தாதாரர்களின் விருப்பமின்றி, அரசு செட்-டாப் பாக்ஸ்களை மாற்றினால் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
தமிழக அரசு, பொதுமக்களின் நலன் கருதி அரசின் திட்டமாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தினால் பொதுமக்கள் பயன் அடையும் வகையில் டிஜிட்டல் செட்-டாப் பாக்ஸ்களை இலவசமாகவும், மாத சந்தா தொகை ரூ.140 மற்றும் 18 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி என்ற குறைந்த கட்டணத்தில் உள்ளுர் கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு, ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேற்படி அரசு செட்-டாப் பாக்ஸ் பெற்று பயன் அடைந்து வரும் சந்தாதாரர்களின் சுய விருப்பம் இல்லாமலும், அரசின் மக்கள் நலத் திட்டத்தை தடுக்கும் வகையிலும் ஆபரேட்டர்கள் தன்னிச்சையாக அரசு செட்-டாப் பாக்ஸ்களை மாற்றினாலோ அல்லது சிக்னல் வராது என்று தவறான தகவலை தெரிவித்து, அதன்மூலம் அரசு செட்-டாப் பாக்ஸ்களை எடுத்துவிட்டு தனியார் செட்-டாப் பாக்ஸ்களை மாற்றினாலோ உடனடியாக பெரம்பலூர் மாவட்ட அரசு கேபிள் டி.வி. அலுவலகத்திற்கு 04328-278473 என்ற தொலைபேசி எண்ணிலும், arasucableperambalur@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம். பொதுமக்களின் விருப்பமின்றி கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் சுயலாபத்திற்காக அரசின் மக்கள் நலத்திட்டத்தை தடுக்கும் வகையில் கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் செயல்படுவதாக வரப்படும் புகார்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா எச்சரித்துள்ளார்.
Related Tags :
Next Story