மதுரை,
மதுரை ஆரப்பாளையம், மெய்யப்பன் 3-வது தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 43). இவரது வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் மது அருந்தி போதையில சத்தம் போட்டு உள்ளனர். இதை கண்ணின் மகன் மற்றும் உறவினர்கள் தட்டி கேட்டு உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் பீர்பாட்டிலால் கண்ணனின் மகன் உள்ளிட்ட சிலரை தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரப்பாளையம் கண்மாய்கரை சேர்ந்த 18 வயது சிறுவன், ஜீவாமணி (19), நவீன்பிரசாத் (21), ஜெயசூர்யா (22) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.