மதுரையில் புதிதாக 125 பேருக்கு கொரோனா


மதுரையில் புதிதாக 125 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 23 Jun 2021 1:36 AM IST (Updated: 23 Jun 2021 1:36 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் புதிதாக 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மதுரை,

மதுரையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் நேற்று புதிதாக 125 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மதுரையில் இதுவரை 71 ஆயிரத்து 566 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது போல நேற்று ஒரே நாளில் 185 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீட்டிற்கு சென்றனர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 69 ஆயிரத்து 802 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 75 ஆக உள்ள நிலையில் நேற்றும் 2 பேர் உயிரிழந்தனர். அவர்கள் இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள். அவர்கள் 60 வயது மற்றும் 66 வயது முதியவர்கள்..
மதுரையில் தற்போது பாதிப்பு குறைந்ததன் விளைவாக சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது. அதன்படி சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 689 ஆக குறைந்துள்ளது.
மதுரையில் தற்போது தடுப்பூசி தேவை அதிகரித்துள்ளதன் விளைவாக கூடுதல் மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் 76 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இதுபோல் இன்று(புதன்கிழமை) நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 34 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற இருப்பதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story