மண் பரிசோதனை முகாம்


மண் பரிசோதனை முகாம்
x
தினத்தந்தி 23 Jun 2021 2:02 AM IST (Updated: 23 Jun 2021 2:02 AM IST)
t-max-icont-min-icon

டி.கல்லுப்பட்டி வட்டாரத்தில் மண்பரிசோதனை முகாம் நடந்தது.

மதுரை

டி.கல்லுப்பட்டி வட்டாரத்தில் மோதகம் மற்றும் சிலார்பட்டி கிராமங்களில் நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம் மூலம் மண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களும், விவசாயிகளும் கலந்து கொண்டனர். இதில் மண் பரிசோதனை முக்கியத்துவம், மண் ஆய்வு முறைகள் மற்றும் மண் வள அட்டை பரிந்துரைப்படி உரமிடுவது குறித்து மண் பரிசோதனை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.முகாமில் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் விவசாயிகள் 60 பேர் கலந்து கொண்டனர்.அவர்கள் எடுத்து வந்த மண் மாதிரி மற்றும் தண்ணீர் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
முகாமில் கல்லுப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் விமலா, வேளாண்மை அலுவலர் ஞானவேல், அபர்ணா, வேளாண்மை உதவி அலுவலர் சந்தான லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர் மகேஸ்வரி செய்திருந்தார்.



Next Story