மாநில இளைஞர் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்-மதுரை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு
முதல்-அமைச்சருக்கான மாநில இளைஞர் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மதுரை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மதுரை,
முதல்-அமைச்சருக்கான மாநில இளைஞர் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மதுரை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாநில இளைஞர் விருது
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகிறது. இந்த விருது 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்படும். இந்த விருது ரூ.50 ஆயிரமும், பாராட்டு பத்திரம், பதக்கம் ஆகியவை உள்ளடக்கியதாகும்.
அதன்படி வருகிற சுதந்திர தின விழாவில் இந்தாண்டிற்கான முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது வழங்கப்படும். இந்த விருது பெறுபவர்களுக்கு கீழ்காணும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
தகுதிகள்
மேலும் கடந்த 1-4-2020 முதல் 31-3-2021 வரை உள்ள காலக்கட்டத்தில் செய்த சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.
விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். (சான்று இணைக்கப்பட வேண்டும்).
விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்படக்கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பம் வினியோகம்
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வருகிற 30-6-21 அன்று மாலை 4 மணி ஆகும்.
இவ்விண்ணப்பப்படிவம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் உள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் வேண்டும் என்று மதுரை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story