மினி பஸ், டிராக்டரில் பேட்டரி திருடியவர் கைது


மினி பஸ், டிராக்டரில் பேட்டரி திருடியவர் கைது
x
தினத்தந்தி 22 Jun 2021 8:46 PM GMT (Updated: 2021-06-23T02:16:13+05:30)

சோழவந்தானில் மினி பஸ், டிராக்டரில் பேட்டரி திருடியவர் கைது செய்யப்பட்டார்.

சோழவந்தான்,

சோழவந்தானை சேர்ந்தவர் மணி என்ற முத்தையா (வயது 65). இவர் வாகன நிறுத்தும் இடம் வைத்து உள்ளார். தற்போது ஊரடங்கு உத்தரவால் இவருடைய வாகன நிறுத்தத்தில் மினிபஸ்கள் மற்றும் டிராக்டர் ஆகியவற்றை நிறுத்தி வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மினிபஸ் மற்றும் டிராக்டரை சரிபார்த்த போது அதில் இருந்து பேட்டரிகள், கார்செட், ஒலிபெருக்கி திருடு போனது தெரிய வந்தது.
இதுகுறித்து மணி சோழவந்தான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சங்கங்கோட்டை சேர்ந்த மருதுபாண்டி (32) என்பவர் தன்னுடைய கூட்டாளியுடன் மினிபஸ் மற்றும் டிராக்டரில் உள்ள பேட்டரி, கார்செட் மற்றும் ஒலிபெருக்கியை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து மருதுபாண்டியை போலீசார் கைது செய்தனர். அவரது கூட்டாளியை தேடி வருகிறார்கள்.Related Tags :
Next Story