ஐதராபாத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு புதிய ரெயில் இயக்க பரிந்துரை
தென்மத்திய மண்டல ரெயில்வே சார்பில் ஐதராபாத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு புதிய ரெயில் சேவை இயக்க ரெயில்வே வாரியத்துக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
மதுரை,
தென்மத்திய மண்டல ரெயில்வே சார்பில் ஐதராபாத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு புதிய ரெயில் சேவை இயக்க ரெயில்வே வாரியத்துக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
கேரளாவுக்கு அதிக ரெயில்கள்
உதாரணமாக கேரள மக்களின் வசதிக்காக திருவனந்தபுரத்தில் இருந்து பாலக்காடு வரை இயக்கப்பட்ட அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரை வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்த ரெயில் சொரனூர் ரெயில் நிலையத்தில் இருந்து 2 ஆக பிரிந்து ராஜாராணி எக்ஸ்பிரஸ் ரெயிலாக திரூர்-கொச்சுவேலி இடையே இயக்கப்பட்டு வந்தது. ரெயில் இயக்கப்பட்ட சில மாதங்களில் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் நேரடியாக திருவனந்தபுரம் சென்றது. அதற்கு பதிலாக இந்த ரெயிலில் இருந்து சில பெட்டிகள் பிரித்து இயக்கப்பட்ட ராஜாராணி எக்ஸ்பிரஸ் தனி ரெயிலாக கொச்சுவேலி-திரூர் இடையே இயக்கப்பட்டது. ஒரே ரெயில் 2 ஆக பிரிக்கப்பட்ட நிலையில் திடீரென்று தனி ரெயிலாக இயக்கப்பட்டது.
பாரபட்ச நடவடிக்கை
இந்த நிலையில், தென்மத்திய ரெயில்வேயின் மூலம் ஐதராபாத் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக தாம்பரம் வரை தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.02760) ஐதராபாத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுமார்க்கத்தில், இந்த ரெயில் (வ.எண்.02759) தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு மாலை 6.10 மணிக்கு ஐதராபாத் ரெயில் நிலையம் சென்றடைகிறது. இதற்கிடையே, இந்த ரெயிலை மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது.
கன்னியாகுமரிக்கு...
அதன்படி, இந்த ரெயில் கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்பட்டால், ஐதராபாத் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் ரெயில்நிலையம் வந்தடையும். அங்கிருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்கு கன்னியாகுமரி ரெயில் நிலையம் சென்றடையும். மறுமார்க்கத்தில், கன்னியாகுமரியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் சென்றடையும். அங்கிருந்து மாலை 6.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.50 மணிக்கு ஐதராபாத் ரெயில் நிலையம் சென்றடையும்.
தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரி ரெயில் நிலையம் 713 கி.மீ. தொலைவில் உள்ளது. இருப்பினும், இந்தியாவின் தென்கோடியில் கன்னியாகுமரி அமைந்திருப்பதால் அதனை இணைப்பதற்கு தென்மத்திய ரெயில்வே முன்வந்துள்ளது. மேலும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள செகந்திராபாத், ஐதராபாத் மற்றும் கச்சிகுடா ஆகிய பகுதிகளில் இருந்து கன்னியாகுமரிக்கு நேரடி ரெயில்சேவை இல்லாததால், பயணிகளின் நலன்கருதி இந்த ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
எப்படி இருப்பினும், ரெயில்வே வாரியத்தை பொறுத்தமட்டில், வடஇந்தியர்களுக்கு தமிழகத்தில் மதுரை, கன்னியாகுமரி முக்கிய ஆன்மிக தலங்களாக உள்ளன. இதனால், அடிக்கடி ஆய்வு என்ற பெயரில் இங்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த அடிப்படையில், தென்மத்திய ரெயில்வேயின் கோரிக்கைக்கு ரெயில்வே வாரியம் உடனடியாக ஒப்புதல் தர வாய்ப்புள்ளது. கால அட்டவணை கமிட்டியில் இது குறித்து விவாதிக்கப்பட்டு விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என தென்மாவட்ட பயணிகளால் எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story