ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 741 பேருக்கு கொரோனா; 4 பேர் பலி- சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைவிட குறைந்தது


ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 741 பேருக்கு கொரோனா; 4 பேர் பலி- சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைவிட குறைந்தது
x
தினத்தந்தி 23 Jun 2021 3:11 AM IST (Updated: 23 Jun 2021 3:11 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 741 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், 4 பேர் பலியானார்கள். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை விட குறைந்தது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 741 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், 4 பேர் பலியானார்கள். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை விட குறைந்தது.
741 பேருக்கு பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா தாக்கத்தின் 2-வது அலை வேகம் குறைந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை தொற்றின் வேகம் மெதுவாக குறைய தொடங்கி இருக்கிறது. மற்ற மாவட்டங்களை விட ஈரோடு மாவட்டத்தில் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. நேற்று முன்தினம் புதிதாக 795 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டார்கள்.
இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 741 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 85 ஆயிரத்து 184 ஆக உயர்ந்தது. இதில் 78 ஆயிரத்து 683 பேர் குணமடைந்து உள்ளார்கள். நேற்று மட்டும் 1,855 பேர் கொரோனாவில் இருந்து மீண்டார்கள். புதிதாக கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு வீரப்பன்சத்திரம் சத்திரோடு பகுதியில் உள்ள ஒரு வீதியை சேர்ந்த மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அங்கு தகரம் வைத்து அடைக்கப்பட்டு உள்ளது.
4 பேர் பலி
புதிதாக கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களை விட குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இதனால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்த வண்ணம் உள்ளது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சையில் இருந்து வந்தனர். அந்த எண்ணிக்கை கடந்த 2 வாரங்களில் வேகமாக இறங்கி, தற்போது 6 ஆயிரத்தை விட குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி 5 ஆயிரத்து 941 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியாகி உள்ளனர். இதில் 51 வயது பெண், 55 வயது ஆண் ஆகியோர் கடந்த 19-ந் தேதியும், 65 வயது முதியவர் 20-ந் தேதியும், 67 வயது மூதாட்டி நேற்றும் கொரோனா தொற்றுக்கு பலியானார்கள். இதனால் பலி எண்ணிக்கை 559 ஆக உயர்ந்தது.

Next Story