வாட்ஸ் அப் மூலமாக மின் கணக்கீடு பெறலாம்- மேற்பார்வை பொறியாளர் இந்திராணி தகவல்
வாட்ஸ் அப் மூலமாக மின் கணக்கீடுகளை பெறலாம் என்று ஈரோடு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் இந்திராணி தெரிவித்து உள்ளார்.
ஈரோடு
வாட்ஸ் அப் மூலமாக மின் கணக்கீடுகளை பெறலாம் என்று ஈரோடு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் இந்திராணி தெரிவித்து உள்ளார். மின்சார வாரியம்
மின் கணக்கீடு
ஈரோடு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் இந்திராணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு மின்வாரிய மின் கணக்கீட்டாளர்கள் ஜூன் மாத மின் கணக்கீடு செய்ய வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர மின் இணைப்புகளுக்கு நேரில் செல்ல முடியாத நிலை உள்ளது. தற்போது கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாத மின் கட்டணத்தை உத்தேச தொகையாக செலுத்தலாம். அந்த கட்டணம் அதிகமாக இருப்பதாக கருதினால், கடந்த ஏப்ரல் மாதம் மின் கட்டணத்தையே செலுத்தலாம். அவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணம் வருகிற ஆகஸ்டு மாதம் மின் கட்டணத்தில் சரி செய்யப்படும்.
நுகர்வோர் தங்களது மின் பயன்பாட்டை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப் மூலமாக அனுப்பி வைத்தால், அதற்கான மின்பயன்பாடு கணக்கீடு செய்யப்படும். அதற்கான மின் கட்டணம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு உள்ள தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாக நுகர்வோருக்கு அனுப்பி வைக்கப்படும். வாட்ஸ் அப் எண்கள் விவரம் வருமாறு:-
வாட்ஸ் அப் எண்கள்
ஈரோடு மண்டல வாட்ஸ் அப் புகார் எண் - 94458 51912
ஈரோடு நகரிய செயற்பொறியாளர் - 94425 91822
ஈரோடு தெற்கு செயற்பொறியாளர் - 94458 52180
பெருந்துறை செயற்பொறியாளர் - 94458 52190
ஈரோடு செயற்பொறியாளர் (பொது) - 94458 52150
ஈரோடு முதுநிலை கண்க்கீட்டு அதிகாரி - 99446 20145
ஈரோடு மின்பகிர்மான வட்ட துணை நிதி கட்டுப்பாட்டு அதிகாரி - 99944 56233
ஈரோடு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் - 94458 51900
மேலும், திருத்தி அமைக்கப்பட்ட மின் கணக்கீட்டை www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் நுகர்வோர்கள் அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மேற்பார்வை பொறியாளர் இந்திராணி தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story