காஞ்சீபுரம் மாவட்டம் கலெக்டர் ஆய்வு


காஞ்சீபுரம் மாவட்டம் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 23 Jun 2021 8:15 AM IST (Updated: 23 Jun 2021 8:15 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம், கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

வாலாஜாபாத், 

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் புத்தகரம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மூழ்குகுட்டை, வாய்க்கால் தூர்வாரும் பணிகளும், ஊராட்சி பொது இடங்களில் தொகுப்பாக மரக்கன்றுகள் நடும் பணிகளும் நடந்து வருகிறது. இதுகுறித்து அறிந்த மாவட்ட கலெக்டர் புத்தகரம் கிராமத்திற்கு நேரில் சென்று அங்கு கிராம மக்கள் செய்துவரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அளவீடுகளையும் சரிபார்த்து கிராம மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் கட்டவாக்கம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் நாற்றங்கால் பண்ணையில் மரக்கன்றுகள் வளர்க்கும் பணிகளையும் மாவட்ட கலெக்டர் நோில் சென்று பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார். ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கராஜ், முத்து சுந்தரம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story