இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
நாகமலைபுதுக்கோட்டை,
மதுரை நாகமலைபுதுக்கோட்டை அருகே புதுக்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி முத்துமாரி (வயது 42). இவர்களது மகள் பூமாதேவி (வயது 21). ஆசிரியர் பயிற்சி முடித்த இவருக்கும், பாலமுருகன் என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் நரசிங்கபுரத்தில் குடியிருந்து வந்தனர். சில நாட்களுக்கு முன்பு பூமாதேவியை புதுக்குளம் அழைத்து வந்தனர். இந்த நிலையில் முத்துமாரி நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பி வந்து பார்த்த போது பூமாதேவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த நாகமலைபுதுக்கோட்டை போலீசார், திருமணமாகி 7 ஆண்டுகள் நிறைவடையாததால் மதுரை ஆர்.டி.ஒ., விசாரணைக்கு பரிந்துரை செய்தனர்.
Related Tags :
Next Story