கரூர் காகிதஆலையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை கலெக்டர் நேரில் ஆய்வு


கரூர் காகிதஆலையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 24 Jun 2021 12:29 AM IST (Updated: 24 Jun 2021 12:29 AM IST)
t-max-icont-min-icon

கரூர் காகிதஆலையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, குறைகளை கேட்டறிந்தார்.

நொய்யல்
கொரோனா சிகிச்சை மையம்
கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காகிதஆலையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் உள்ளது. இந்த மையத்தில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேற்று முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து சென்று பார்வையிட்டார். பின்னர் அங்கு சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் 23 பேரை நேரில் சென்று பார்த்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் உணவுகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர்கள் பயன்படுத்தும் கழிவறைகள் சுத்துமாக உள்ளதா? என்பது குறித்து பார்வையிட்டார்கள். பின்னர் மண்மங்கலம் அரசு மருத்துவமனையில் பாலுட்டும் தாய்மார்களுக்கும், பிற பெண்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் முகாமினை பார்வையிட்டு, அவர்களை உற்சாகப்படுத்தினார்.
கபசுரகுடிநீர்
அதனை தொடர்ந்து புன்செய் புகளூர் வட்டம் முத்தனூரில் நடத்தப்பட்டு வந்த சிறப்பு மருத்துவ முகாமினை பார்வையிட்ட கலெக்டர் அங்கிருந்த மக்களுக்கு கபசுரக்குடிநீரை வழங்கினார். பின்னர், அப்பகுதியில், வீடுவீடாக சென்று கொரோனா தொற்றுக்கான அறிகுறிகளுடன் எவரேனும் இருக்கின்றார்களா? என்பது குறித்து களப்பணியாளர்கள் நேரில் விசாரித்து கணக்கெடுக்கும் பணிகளில் ஈடுபட்டுவருவதை நேரில் பார்வையிட்டார்.
பின்னர் மண்மங்கலம் வட்டம் சோமூர்- இடையார்பட்டியில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர் வசித்து வந்த பகுதிக்கு நேரில் சென்று தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் மற்றும் உறவினர்களிடம் கலந்துரையாடி, அனைவரும் ஆர்.டி.பி.ஆர். பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மரம் வளர்க்கும் திட்டம் 
பின்னர் திருமுக்கூடலூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் பெருமளவில் மரம் வளர்க்கு திட்டத்தை பார்வையிட்டு அனைத்து மரங்களுக்கும் முறையாக தண்ணீர் செலுத்தி வளர்க்க வேண்டும் என கேட்டுக்கெண்டார்.
இந்நிகழ்வுகளின்போது மருத்துவநலப்பணிகள் இணை இயக்குனர் ஞானக்கண்பிரேம் நிவாஸ், சுகாதாரத்துறை துணை இயக்குனர் சந்தோஷ், தாசில்தார்கள் செந்தில் (புகளூர்), செந்தில்குமார் (மண்மங்கலம்), வாங்கல் வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் டாக்டர்பிரியங்கா, ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அனிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
1 More update

Next Story