70 அடி உயர தண்ணீர் தொட்டியில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்


70 அடி உயர தண்ணீர் தொட்டியில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 23 Jun 2021 8:00 PM GMT (Updated: 23 Jun 2021 8:00 PM GMT)

உசிலம்பட்டியில் 70 அடி உயர தண்ணீர் தொட்டியில் ஏறி வாலிபர் தற்கொலைக்கு முயன்றார். தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி வாலிபரை மீட்டனர்.

உசிலம்பட்டி, ஜூன்
உசிலம்பட்டியில் 70 அடி உயர தண்ணீர் தொட்டியில் ஏறி வாலிபர் தற்கொலைக்கு முயன்றார். தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி வாலிபரை மீட்டனர்.
தற்கொலைக்கு முயன்ற வாலிபர்
உசிலம்பட்டி அருகே அயன்மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜீவா (வயது 35). புகைப்பட கலைஞர். தற்போது ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று ஜீவா உசிலம்பட்டி பஸ் நிலையம் அருகே உள்ள 70 அடி உயர தண்ணீர் தொட்டியின் மீது ஏறினார். பின்னர் அவர் தண்ணீர் தொட்டி விளிம்பில் நின்று கொண்டு கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள இருப்பதாக சத்தம் போட்டார்.
தீயணைப்பு துறையினர் விரைந்தனர்
உடனே அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அவரை கீழே குதிக்க வேண்டாம் என சத்தம் போட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் உசிலம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் தங்கம் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தற்கொலைக்கு முயன்ற ஜீவாவை மீட்டு உசிலம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். குடும்ப ெசாத்தை உறவினர்கள் பிரித்து தர மறுப்பதால் அவர் தற்கொலை செய்ய முயன்றது விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story