அந்தியூர் பகுதியில் 28 பேருக்கு தொற்று: வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை
அந்தியூர் பகுதியில் 28 பேருக்கு தொற்று உறுதியானதால் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அந்தியூர்
அந்தியூர் பகுதியில் 28 பேருக்கு தொற்று உறுதியானதால் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா தொற்று
அந்தியூர் பகுதியில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் அந்தியூர் பகுதியில் 4 பேரும், அத்தாணி பகுதியில் ஒருவரும், பர்கூர் ஊராட்சியில் 2 பேரும், பிரம்மதேசம் ஊராட்சியில் 3 பேரும், சின்னதம்பிபாளையம் ஊராட்சியில் 3 பேரும், எண்ணமங்கலம் ஊராட்சியில் 2 பேரும், கீழ்வாணி ஊராட்சியில் 2 பேரும், குப்பாண்டம்பாளையம் ஊராட்சியில் ஒருவரும், மைக்கேல்பாளையம் ஊராட்சியில் 4 பேரும், நகலூர் ஊராட்சியில் 3 பேரும், பச்சாம்பாளையம் ஊராட்சியில் 2 பேரும், வேம்பத்தி ஊராட்சியில் ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டார்கள். அவர்கள் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரி, பவானி அரசு ஆஸ்பத்திரி, ஈரோடு அரசு ஆஸ்பத்திரி, பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக சிகிச்சை மையம் ஆகிய பகுதிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு கிருமி நாசினி தெளித்தல், சுத்தம் செய்தல், பிளீச்சிங் பவுடர் தூவுதல் போன்ற பணிகள் செய்யப்பட்டன.
பரிசோதனை
இந்தநிலையில் கொரோனா தொற்று மேலும் பரவுவதை தடுக்கும் வகையில் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் சின்னத்தம்பிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சக்திகிருஷ்ணன், அந்தியூர் பேரூராட்சி செயல் அதிகாரி ஹரி ராமமூர்த்தி மற்றும் சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று மக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொந்தரவு உள்ளதா? என்று பரிசோதனை செய்தனர். அப்போது உடல் வெப்பநிலை அதிகமாக உள்ளவர்களுக்கும், நோய் தொற்றுக்கான அறிகுறி உள்ளவர்களுக்கும் கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டது.
அந்தியூர், தவுட்டுபாளையம், சின்னதம்பிபாளையம், நகலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story