மதுரையில் குறையும் கொரோனா பாதிப்பு

மதுரையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் காலியாகி வருகின்றன.
மதுரை,ஜூன்
மதுரையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் காலியாகி வருகின்றன.
கொரோனா பாதிப்பு
மதுரையில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. அந்த வகையில் நேற்று 112 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 8 ஆயிரம் பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 112 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 80 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71 ஆயிரத்து 793 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல், நேற்று 128 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 85 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்களையும் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 85 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் 631 ஆக குறைந்துள்ளது. அவர்கள் அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகள், கொரோனா கேர் சென்டர்களில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வெளி மாவட்டத்தை சேர்ந்த 120 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
2 பேர் பலி
இதனிடையே மதுரையைச் சேர்ந்த 64, 71 வயது முதியவர்கள் கொரோனா பாதிப்பால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழந்தனர். இவர்களுடன் சேர்த்து மதுரையில் இதுவரை 1,077 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் நிலையில் மீண்டும் பாதிப்பு அதிகரிக்காத வகையில் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று சுகாதார துறையினர் வலியுறுத்தியுள்ளனர். முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதார துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
காலியாகும் படுக்கைகள்
மதுரையில் கடந்த மாதம் தினசரி பாதிப்பு 1,200 முதல் 1,500 வரை பதிவாகி வந்தது. இதனால் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்காத நிலை உருவானது. இந்த நிலையில் கடந்த 2 வாரமாக தினசரி பாதிப்பு குறைய தொடங்கி, தற்போது பாதிப்பு 200-க்கும் கீழ் பதிவாக தொடங்கியிருக்கிறது. மேலும் தினமும் 150 நபர்கள் வரை குணமடைந்து வீட்டிற்கு சென்று வருகிறார்கள். இதனால் மருத்துவமனைகளின் படுக்கைகள் காலியாகி வருகிறது.
குறிப்பாக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரி உள்ளிட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் 2,383 படுக்கைகளும், 89 தனியார் மருத்துவமனைகளில் 2,113 படுக்கைகளும், 38 கொரோனா கேர் சென்டர்களில் 2,528 படுக்கைகளும் காலியாகி இருக்கிறது. இதுபோல், ஆக்சிஜன் படுக்கைகளும் காலியாக இருக்கிறது.
Related Tags :
Next Story






