காஞ்சீபுரம் மாவட்டத்தில், கலெக்டரிடம் கோரிக்கை மனு


காஞ்சீபுரம் மாவட்டத்தில், கலெக்டரிடம் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 25 Jun 2021 7:41 AM IST (Updated: 25 Jun 2021 7:41 AM IST)
t-max-icont-min-icon

வயதானோர், ஊனமுற்றோர் என ஏராளமானோர் உள்ளனர். முன்னாள் ராணுவ வீரர்கள் நல வாரிய அலுவலகம் தாம்பரத்தில் செயல்பட்டு வருகிறது.

வாலாஜாபாத், 

காஞ்சீபுரம் மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இவர்களில் வயதானோர், ஊனமுற்றோர் என ஏராளமானோர் உள்ளனர். முன்னாள் ராணுவ வீரர்கள் நல வாரிய அலுவலகம் தாம்பரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு பல்வேறு காரணங்களுக்காக வயதான முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சென்று வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. அவர்கள் காஞ்சீபுரத்தில் இருந்து தாம்பரத்திற்கு சென்றுவர சிரமப்பட்டு வருகின்றனர்.

அதனால் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் நல வாரிய அலுவலகம் அமைக்க வேண்டுமென காஞ்சீபுரம் மாவட்ட முன்னாள் முப்படை மற்றும் துணை படைவீரர்கள் நலச்சங்க தலைவர் கேப்டன் ராமசாமி தலைமையில் நலச்சங்க உறுப்பினர்கள் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Next Story