திருவள்ளூர், கலெக்டர் ஆய்வு


திருவள்ளூர், கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 25 Jun 2021 10:55 AM IST (Updated: 25 Jun 2021 10:55 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர், 

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் கட்டிட பணிகளை நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியில் இருந்த அதிகாரிகளிடம் பணியை தரமாகவும், விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார். அதைத் தொடர்ந்து கலெக்டர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ரத்த சேமிப்பு வங்கி, மகப்பேறு சிகிச்சை பிரிவு போன்றவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அவருடன் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் அரசி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story