ஜூன் 25: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்


Image courtesy : ANI
x
Image courtesy : ANI
தினத்தந்தி 25 Jun 2021 10:00 PM IST (Updated: 25 Jun 2021 10:00 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் இன்று 5 ஆயிரத்து 755 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று 5 ஆயிரத்து 755 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 55 ஆயிரத்து 332 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 47 ஆயிரத்து 318 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரேநாளில் 8 ஆயிரத்து 132 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 75 ஆயிரத்து 963 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 150 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 51 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு விவரம்:-

அரியலூர் - 59
செங்கல்பட்டு - 251
சென்னை - 350
கோவை - 698
கடலூர் - 138
தர்மபுரி - 102
திண்டுக்கல் - 48
ஈரோடு - 597
கள்ளக்குறிச்சி - 110
காஞ்சிபுரம் - 82
கன்னியாகுமரி - 106
கரூர் - 69
கிருஷ்ணகிரி - 139
மதுரை - 104
நாகை - 97
நாமக்கல் - 228
நீலகிரி - 132
பெரம்பலூர் - 33
புதுக்கோட்டை - 73
ராமநாதபுரம் - 35
ராணிப்பேட்டை - 92
சேலம் - 398
சிவகங்கை - 88
தென்காசி - 45
தஞ்சாவூர் - 277
தேனி - 65
திருப்பத்தூர் - 42
திருவள்ளூர் - 144
திருவண்ணாமலை - 156
திருவாரூர் - 72
தூத்துக்குடி - 70
திருநெல்வேலி - 40
திருப்பூர் - 361
திருச்சி - 220
வேலூர் - 68
விழுப்புரம் - 87
விருதுநகர் - 79

மொத்தம் - 5,755

Next Story