ஒன்றிய ஆணையாளர்கள் பணியிட மாற்றம்


ஒன்றிய ஆணையாளர்கள் பணியிட மாற்றம்
x
தினத்தந்தி 26 Jun 2021 1:53 AM IST (Updated: 26 Jun 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

வாடிப்பட்டியில் ஒன்றிய ஆணையாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

வாடிப்பட்டி,

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்(வட்டார ஊராட்சி) ராஜா செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கும், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிந்த ரத்தின கலாவதி வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கும் வட்டார ஊராட்சி ஆணையாளராக பணிமாற்றம் செய்யப்பட்டனர்.
அதேபோல் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம ஊராட்சி ஆணையாளராக பணியாற்றிய ராமமூர்த்தி மேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கும், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளராக பணியாற்றிய ராமர், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளராகவும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


Next Story