கழுத்தை அறுத்து தொழில் அதிபர் தற்கொலை


கழுத்தை அறுத்து தொழில் அதிபர் தற்கொலை
x
தினத்தந்தி 26 Jun 2021 2:06 AM IST (Updated: 26 Jun 2021 2:06 AM IST)
t-max-icont-min-icon

மேலூரில் கழுத்தை அறுத்து தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்டார்.

மேலூர்,

மேலூர் கோட்டைகிணறு பகுதியை சேர்ந்தவர் ஜலாலுதீன் (வயது 47). தொழில் அதிபர். இவர் வீட்டின் வெளியே கழுத்து அறுபட்டு உயிருக்கு போராடி கொண்டு இருந்தார். உடனே அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாகவும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ள போவதாக பலரிடம் கூறி வந்ததாக தெரிய வந்தது. இதனால் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story