திருமங்கலம்,
திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரப்பட்டி கிராமத்தில் புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பேரில் திருமங்கலம் தாசில்தார் முத்துப்பாண்டியன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்பை அகற்ற பொக்லைன் எந்திரத்துடன் சென்றனர். அப்போது கிராம பொதுமக்கள் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு முன்பு முறையான நோட்டீஸ் வழங்கவில்லை எனக்கூறி அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றாமல் திரும்பி சென்றனர்.