6 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது-ரூ.1½ லட்சம் பறிமுதல்


6 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது-ரூ.1½ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 26 Jun 2021 2:24 AM IST (Updated: 26 Jun 2021 2:24 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் அருகே 6 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பரங்குன்றம்,

மதுரை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் திருமங்கலம் உட்கோட்ட சரக போலீஸ்  துணைசூப்பரண்டு வினோதினி மேற்பார்வையில் ஆஸ்டின்பட்டி சப்-இன்ஸ்பெக்டர்கள் சாமியப்பன், கோபிநாத் மற்றும் போலீசார் சாக்கிலிப்பட்டியில் வாகன சோதனை நடத்தினார்கள்.அப்போது மதுரையிலிருந்து சாக்கிலிப்பட்டி நோக்கி வந்த 3 மோட்டார் சைக்கிள்களை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
விசாரணையில் மதுரை கோ.புதூர் மகாலட்சுமி நகரை சேர்ந்த பிரேம் குமார் (வயது21) மதுரை விசாலாட்சிபுரத்தைச் சேர்ந்த காசிமாயன் (22), அலங்காநல்லூர் சேர்ந்த அஜ்மீர் காஜாமைதீன் (31) மதுரை மகாலட்சுமி நகரைச் சேர்ந்த அழகுமீனாள் (30) ஆகிய 4 பேர் கஞ்சா விற்பவர்கள் என்று தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சா, ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்து 710-ஐ பறிமுதல் செய்தனர். 3 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் அழகு மீனாள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். மற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.



Next Story