‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: தமிழக-கர்நாடக எல்லையில் அதிகாரிகள் ஆய்வு
தினத்தந்தி செய்தி எதிரொலியால் தமிழக-கர்நாடக எல்லையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தாளவாடி
தினத்தந்தி செய்தி எதிரொலியால் தமிழக-கர்நாடக எல்லையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தொற்று அச்சம்
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ளது. எல்லை பகுதி ரோடுகளில் உள்ள பாரதிபுரம், ராமாபுரம், பந்துகநல்லி, அருள்வாடி, எத்திகட்டை ஆகிய பகுதிகளில் சோதனை சாவடி அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்பட்டு பஸ் போக்குவரத்து சேவை தொடங்கியது. இதனால் அந்த மாநிலம் சாம்ராஜ்நகரில் இருந்து ஈரோடு மாவட்டம் தாளவாடி எல்லை பகுதியான பாரதிபுரம் வரை பஸ் வந்து சென்றது. இதன் காரணமாக தொற்று பரவல் அதிகரிக்கும் என பொதுமக்கள் அச்சப்பட்டனர். இந்த செய்தி ‘தினந்தந்தி’ நாளிதழில் நேற்று வெளியானது.
அதிகாரிகள் ஆய்வு
அதைத்தொடர்ந்து தாளவாடி தாசில்தார் உமாமகேஷ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன், ஒன்றிய செயலாளர் குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு ஆகியோர் தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள பாரதிபுரம், அருள்வாடி, பிசில்வாடி பகுதியில் ஆய்வு செய்தனர்.
அப்போது அவர்கள், சோதனை சாவடியில் வாகன தணிக்கையை கடுமையாக்க வேண்டும். அத்தியாவசிய வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் கர்நாடகாவில் இருந்து தமிழகத்தில் நுழையும் போது இ-பதிவு இருந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் இருந்து இ-பதிவு இல்லாமல் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.
Related Tags :
Next Story