இன்று மின்சாரம் நிறுத்தும் இடங்கள் விவரம்


இன்று மின்சாரம் நிறுத்தும் இடங்கள் விவரம்
x
தினத்தந்தி 26 Jun 2021 2:51 AM IST (Updated: 26 Jun 2021 2:51 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (சனிக்கிழமை) சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மதுரை,

பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (சனிக்கிழமை) சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அதன் விவரம் வருமாறு:-

பராமரிப்பு பணிகள்

ஆனையூர், திருப்பாலை மின் பிரிவுக்கு உட்பட்ட பனங்காடி பீடரில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பாரதிபுரம் காலனி, ஆலங்குளம் பகுதிகள், அன்பு நகர், கீழ பனங்காடி, மேல பனங்காடி, பல்லவி நகர் பகுதிகள், அப்துல்கலாம் நகர், கலைநகர், வள்ளுவர் காலனி, மீனாட்சி அவென்யு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
மதுரை வடக்கு ெபருநகர், கோட்டம், சொக்கிகுளம், ரேஸ்கோர்ஸ், ஆக்கிகுளம், கோ.புதூர் மின்பிரிவுகளுக்கு உட்பட்ட உழவர் சந்தை பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வள்ளுவர் காலனி, ரத்தினசாமி நாடார் ரோடு, கிருஷ்ணாபுரம் காலனி, விஸ்வநாதபுரம், விசாலாட்சிபுரம், உழவர் சந்தை ரோடு, மண்மலை ரோடு, டி.ஆர்.ஓ. காலனி மெயின் ரோடு, தியேட்டர் பகுதி, டி.ஆர்.ஓ. காலனி பள்ளிவாசல் எதிர்புரம், ரைஸ்மில் பகுதி, கண்ணிமாரியம்மன் கோவில் பகுதி, ஆத்திகுளம், குறுஞ்சிநகர் ராமகிருஷ்ணா மடம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்வினிேயாகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ரிங்ரோடு

அரசரடி, ஆனையூர், அவனியாபுரம் துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பைபாஸ் ரோடு, பிரசன்னா காலனி, வைகை வீடுகள், சந்தோஸ் நகர், வள்ளலானந்தாபுரம், ஜே.ஜே.நகர், வைக்கம் பெரியார் ரோடு, ரிங்ே்ராடு, காமராஜர் நகர், ரெயிலார் நகர், உழவர் சந்தை, சங்கித் நகர், சஞ்சவீ நகர், டி.என்.எச்.பி. காலனி, அன்பு நகர், பி.எஸ்.என்.எல். மெயின்ரோடு, சிலை நேரி, தமிழ்நகர், பாலமுருகன் கோவில் தெரு, சொக்கலிங்க நகர் 1 முதல் 9 தெருக்கள், டி.எஸ்.பி. நகர், பொன்மேனி மெயின்ரோடு, எஸ்.எஸ்.காலனி, வடக்கு வாசல் பிள்ளையார் கோவில் தெரு, ஜானகி நாராயணன் தெரு, பொன்மேனி நாராயணன் தெரு, பாரதியார் மெயின்ரோடு 1, 2-வது தெரு, வேலம்மாள் தெரு, பார்த்த சாரதி தெரு, ஜவகர் மெயின்ரோடு 1 முதல் 5-வது தெரு, திருவள்ளுவர் தெரு, கண்ணதாசன் தெரு, சுப்பிரமணியபிள்ளை தெரு, நாவலர் 1 முதல் 3-வது தெரு, பைபாஸ் ேராடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என பிரகாஷ் பாபு தெரிவித்துள்ளார்.

ஆரப்பாளையம்

ஆரப்பாளையம், கோவில், அனுப்பானடி துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சுடு தண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜாமில் ரோடு, கனகவேல் காலனி, மணி நகர் மெயின் 1, 2-வது தெரு, ஒர்க்‌ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரம், தமிழ்சங்கம் ரோடு, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம், திலகர் திடல் சந்தை, மீனாட்சி அம்மன் கோவில், கீழசித்திரை வீதி, திருமை நாயக்கர் படித்துறை, வக்கீல் புது தெரு, வடக்குமாசி வீதி, தைக்கால் தெரு, அனுமார் கோவில் படித்துறை, வடக்கு வெளிவீதி, வடக்கு சித்திரை வீதி, கீழபட்டமார் தெரு, வடக்காவணி மூலவீதி, மேல பட்டமார் தெரு, மேல சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதி, வெள்ளியம்பலம் தெரு, தெற்கு காவல்கூட தெரு, கீழ சித்திரை வீதி, தெற்காவணி மூல வீதி, சுந்தரராஜபுரம், வாரியார் நகர் 1, 2-வது தெரு, வானவில் நகர், ஐராவதநல்லூர் மெயின்ரோடு, பழைய, புதிய செக்போஸ்ட், கோனார் ேதாப்பு, வண்ணார்மடம், ராஜீவ்காந்தி நகர், மாணிக்கம் நகர், மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரியம் முழுவதும், கிறிஸ்டியன் தெரு, சூசை மைக்கேல் தெரு, அய்யனார் கோவில் மார்க்கெட், மண்எண்ணெய் பல்க் ஏரியா, மேல அனுப்பானடி மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

பாண்டிகோவில்

மதுரை கோமதிபுரம் பீடர், கண்மாய்பட்டி பீடர், எல்காட் பீடர் பகுதியில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் பாண்டிகோவில், கண்மாய்பட்டி, கோமதிபுரம் 1 முதல் 7 வரை உள்ள தெருக்கள், மேலமடை, ஹவுசிங் போர்டு, முகவை தெரு, மருதுபாண்டியர் தெரு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள், ஐ.டி.பார்க் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்வினி்யோகம் இருக்காது.
 பந்தயதிடல் மின்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இன்று (26-ந்தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மழைக்கால அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் டி.ஆர்.ஓ.காலனி, ஜவகர்புரம், திருவள்ளுவர் நகர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது என செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
திருமங்கலம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சிவா ஏர் சிஸ்டம், ஏ.டி.ஆர்.பிளாஸ்டிக் தெரு, ஏ.டி.ஆர். சேல்ஸ் கம்பெனி, ஜெய கிருஷ்ணா பிளவர் மில், ஜி.டி. டெக்ஸ்டைல், ஸ்னாக்ஸ் மெயின் ரோடு, ஏ.டி.கே. பைப் கம்பெனி, கள்ளிக்குடி, மேலப்பட்டி, ஓடப்பட்டி, தென்னம்பட்டி, குராயூர், மோச்சிகுளம், மாசவ நத்தம், பேரையூர் பகுதி முழுவதும் இன்று 9 மணி முதல் 11 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மின்வாரியம் தெரிவித்து உள்ளது.

Next Story