பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது


பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது
x
தினத்தந்தி 26 Jun 2021 3:23 AM IST (Updated: 26 Jun 2021 3:23 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது

பவானிசாகர்
தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த 4 நாட்களாக மழை பெய்யவில்லை. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து குறைந்தது.
நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 889 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 93.23 அடியாக இருந்தது. நேற்று மாலை 4 மணிக்கு பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 188 கன அடி தண்ணீர் மட்டுமே வந்தது. அணையின் நீர்மட்டம் 93.29 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 200 கனஅடி தண்ணீரும், பாசனத்திற்காக வினாடிக்கு 800 கனஅடி தண்ணீரும் என மொத்தம் வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

Next Story