ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
மதுரை
மதுரை செல்லூர் தத்தனேரி அருள்தாஸ்புரம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வநாயகம்(வயது 40). கடந்த சில நாட்களுக்கு முன்பு 2,500 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். ஏற்கனவே அவர் கடந்த ஆண்டு ரேஷன் அரிசி கடத்தியதாக கைது செய்யப்பட்டிருந்தார். இதைதொடர்ந்து அவர் ரேஷன் அரிசி கடத்தி வருவதால் அவரை குண்டர்சட்டத்தில் கைது செய்யுமாறு உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின்படி தற்போது செல்வநாயகம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டத்தில் யாரேனும் ரேஷன் அரிசியை கடத்தினாலோ அல்லது பதுக்கி வைத்தாலோ அவர்கள் மீது, குண்டர் சட்டம் பாயும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story