தேசிய கபடி போட்டி நடுவர் தற்கொலை


தேசிய கபடி போட்டி நடுவர் தற்கொலை
x
தினத்தந்தி 27 Jun 2021 12:53 AM IST (Updated: 27 Jun 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

தேசிய கபடி போட்டி நடுவர் தற்கொலை

மதுரை
மதுரை செல்லூர் தத்தனேரி கொன்னவாயன் சாலை பகுதியை சேர்ந்தவர் குட்டி என்ற பாலசுப்பிரமணியராஜா(வயது 57). கபடி வீரான இவர் தேசிய கபடி போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார். தற்போது இளைஞர்கள், மாணவர்களை கொண்ட கபடி அணியை உருவாக்கி அவர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார். மேலும் இவர் மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வந்தார். அதில் கிடைக்கும் வருமானத்தை வீட்டிற்கு கொடுக்காமல் கபடி விளையாட்டுக்காக செலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பம் வறுமையில் வாடியது. இந்த சம்பவத்தால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு தம்பதியினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவருத்தம் அடைந்த  பாலசுப்பிரமணியராஜா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story