திம்பம் மலைப்பாதையில் சாலையோர மரத்தில் படுத்திருந்த சிறுத்தை; வாகன ஓட்டிகள் அச்சம்


திம்பம் மலைப்பாதையில் சாலையோர மரத்தில் படுத்திருந்த சிறுத்தை; வாகன ஓட்டிகள் அச்சம்
x
தினத்தந்தி 27 Jun 2021 2:15 AM IST (Updated: 27 Jun 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

திம்பம் மலைப்பாதையில் சாலையோர மரத்தில் சிறுத்தை படுத்திருந்தது.

தாளவாடி
சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக தாளவாடி நோக்கி காரில் 2 பேர் சென்று கொண்டிருந்தனர். திம்பம் மலைப்பாதையின் 25-வது கொண்டை ஊசி வளைவு அருகே கார் வந்தபோது, சாலையோரத்தில் உள்ள மரத்தில் சிறுத்தை ஒன்று ஹாயாக படுத்திருந்தது. இதனை பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் காரில் இருந்தபடியே  தங்களுடைய செல்போனில் சிறுத்தையை படம் பிடித்தனர்.
இந்த படம் தற்போது வைரலாகி பரவி வருகிறது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வனவிலங்குகள் சாலையோரத்தில் வருவதால் வாகன ஓட்டிகள் வனச்சாலையில் கவனமுடன் செல்லவேண்டும் என்று கூறினர். மேலும் வாகனங்களில் செல்லும் போது அதிக ஒலி எழுப்பவோ, வன விலங்குகளை புகைப்படம் எடுக்கவோ கூடாது என்று அறிவுறுத்தினர்.

Next Story