பெருந்துறை அருகே தார் டின்னுக்குள் சிக்கிய ஆடு உயிருடன் மீட்பு
பெருந்துறை அருகே தார் டின்னுக்குள் சிக்கிய ஆடு உயிருடன் மீட்கப்பட்டது.
பெருந்துறை
பெருந்துறையை அடுத்துள்ள மேற்கு சீனாபுரத்தை சேர்ந்தவர் லதா (வயது 45). இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று ஆடுகள் ரோட்டோரம் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது, ஆடு ஒன்று துள்ளி குதித்துக்கொண்டு ஓடியதில், எதிர்பாராதவிதமாக ரோட்டோரம் வைக்கப்பட்டிருந்த தார் நிரம்பிய டின்னுக்குள் விழுந்து விட்டது. இதனால் ஆட்டுக்குட்டியின் கால்கள் தாருக்குள் சிக்கிக்கொண்டன. உடனே இது குறித்து, பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் விரைந்து வந்த நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு படையினர் தார் டின்னுக்குள் சிக்கிக்கொண்ட ஆட்டுக்குட்டியை உயிருடன் மீட்டனர்.
Related Tags :
Next Story