ஈரோடு மாவட்டத்தில் 6 பெண்கள் உள்பட 13 பேர் கொரோனாவுக்கு பலி; புதிதாக 574 பேருக்கு தொற்று


ஈரோடு மாவட்டத்தில் 6 பெண்கள் உள்பட  13 பேர் கொரோனாவுக்கு பலி; புதிதாக 574 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 27 Jun 2021 2:23 AM IST (Updated: 27 Jun 2021 2:23 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் 6 பெண்கள் உள்பட 13 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 574 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 6 பெண்கள் உள்பட 13 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 574 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
574 பேருக்கு தொற்று
தமிழக அளவில் கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்திலும் ஈரோடு மாவட்டம் 2 -வது இடத்திலும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி கோவை மாவட்டத்தில் 671 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டத்தில் 574 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 87 ஆயிரத்து 685 ஆக உயர்ந்தது.
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 748 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 82 ஆயிரத்து 597 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா தொற்று உள்ள 4 ஆயிரத்து 509 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
13 பேர் பலி
இதற்கிடையில் கொரோனாவுக்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 54 வயது ஆண், 68 வயது, 65 வயது முதியவர்கள், 69 வயது, 61 வயது மற்றும் 65 வயது மூதாட்டிகள் ஆகியோர் கடந்த 16-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
மேலும் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த 80 வயது முதியவர், 60 வயது பெண் ஆகியோர் கடந்த 17-ந் தேதியும், 68 வயது மற்றும் 75 வயது முதியவர்கள் 19-ந்தேதியும், 55 வயது ஆண் 22-ந்தேதியும்,   63 வயது மூதாட்டி 23-ந் தேதியும், 55 வயது பெண் நேற்றும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 579 ஆக உயர்ந்தது.
அந்தியூர்
அந்தியூர் பகுதியைச் சேர்ந்த 9 பேருக்கும், வெளியூர்களில் இருந்து அந்தியூர் வந்த 4 பேருக்கும், பர்கூர் ஊராட்சியில் 2 பேருக்கும், பிரம்மதேசம் ஊராட்சியில் 5 பேருக்கும், கெட்டிசமுத்திரம் ஊராட்சியில் 2 பேருக்கும், குப்பாண்டபாளையம் ஊராட்சியில் ஒருவருக்கும் உள்பட என 36 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரி, பவானி அரசு ஆஸ்பத்திரி, ஈரோடு அரசு ஆஸ்பத்திரி, பெருந்துறை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் ஈரோடு தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொற்று பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்திலும், அந்தியூர் ஐடியல் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்திலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சத்தி கூத்தம்பாளையம்
சத்தியமங்கலம் அருகே உள்ள கூத்தம்பாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் சுமார் 85 பெண்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் கே.சி.பி இளங்கோ தலைமையில் சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அப்துல் வகாப், உத்தமபாளையம் ஊராட்சி தலைவர் மற்றும் சுகாதார அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story